இணையத்தில் கசிந்த ஜன நாயகன்!
ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் 3 மணி நேர முழு படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமாக இணையத்தில் முழு படமும் வெளியான நிலையில், இதனை யார் வெளியிட்டிருப்பார்கள் என்பது குறித்து முறைப்பாடு அளிக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வெளியாகவிருந்த ஜன நாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை மற்றும் தேர்தல் காரணமாக வெளியாவதில் சிக்கல்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





