இலங்கை

தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மோதல் – ஒருவர் பலி

ஹோமாகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விருந்து நிகழ்வின் போது, மாணவர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதில் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த மாணவரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!