இலங்கை செய்தி

கத்திக்குத்து தாக்குதலில் பெண் பலி: வவுனியாவில் பயங்கரம்!!

வவுனியா, செக்கடிப்புலவு பகுதியில் தனது சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண், சிகிச்சை பலனின்றி வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என்று பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செக்கடிப்புலவு கிராமத்தைச் சேர்ந்த பவளரத்தினம் செல்வமலர் (வயது 56) என்ற பெண்ணுக்கும், அவரது சகோதர முறையான ஒருவருக்கும் இடையில் நேற்று இரவு திடீரெனத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, மதுபோதையில் இருந்த மேற்படி நபர், ஆத்திரமடைந்து தனது சகோதரியைக் கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த பெண்ணை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைப் பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், கொலைக்கான காரணங்கள் மற்றும் மேலதிக விவரங்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!