ஆங்கில கால்வாயில் பெரும் துயரம் – அகதிகளை ஏற்றிய படகு விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழப்பு
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையிலான ஆங்கில கால்வாய் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்படும் ‘டாக்ஸி-போட்’ (Taxi-boat) வகை படகு விபத்துக்குள்ளானதில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
ஈக்விஹென்-பிளாஜ் மற்றும் ஹார்டெலோட்-பிளாஜ் (Equihen-Plage and Hardelot-Plage) இடையே உள்ள பூலோன் கடற்கரைப் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், குறைந்தது 42 பேர் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு சிறிய படகில் ஏற முயன்றபோது, பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் உயிரிழந்ததாக பிரான்ஸ் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 2,200 அகதிகள் இந்தப் ஆபத்தான கடல் வழியைக் கடந்துள்ள நிலையில், சிறிய படகுப் போக்குவரத்தைத் தடுக்க இரு நாடுகளும் புதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்த வகை படகுகள் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களால் வடக்கு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் கடற்கரைப் பகுதிகளில் இருந்து அகதிகளை ஆங்கில கால்வாய் வழியாக கடத்தப் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 2,200 பேர் இந்த ஆபத்தான கடல் பாதையை கடந்துள்ளனர். இதனையடுத்து, இத்தகைய சிறிய படகு கடப்புகளைத் தடுக்க புதிய ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
எனினும், கடல் வழிக் கடத்தல்களைத் தடுப்பதில் யார் முன்னிலை வகிக்க வேண்டும் என்பது தொடர்பான கருத்து வேறுபாடுகள் இன்னும் நீடித்து வருகின்றன.





