அவசரகாலச் சட்டம் மேலும் நீடிப்பு: நாடாளுமன்றம் ஒப்புதல்!
இலங்கையில் அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட எதிரணிகள் எதிராக வாக்களித்தன.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்குரிய தீர்மானம்மீது இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு, பிறகு வாக்கெடுப்பு இடம்பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.





