இந்தியா செய்தி

புதுச்சேரி,கேரளா மற்றும் அசாமில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு பதிவு

கேரளாவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 62.71% வாக்குகளும், அசாமில் 75.91% வாக்குகளும், புதுச்சேரியில் 72.40% வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

இதன்படி, 30 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் 10 லட்சத்து 14 ஆயிரத்து 70 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு காலை 11 மணி நிலவரப்படி 37% வாக்குகளும், பகல் 1 மணி நிலவரப்படி 56.83% வாக்குகளும் பதிவாகின. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 72.40% வாக்குகள் பதிவாகின.

இங்கு என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும்
இடையே கடும் போட்டி நிலவுகிறது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் இந்த தேர்தலில் முக்கிய சக்திகளாகக் கருதப்படுகின்றன.

அத்துடன் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளாவில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2.71 கோடி வாக்காளர்களைக் கொண்ட கேரளாவில் 883 வேட்பாளர்கள் உள்ளனர். காலை 11 மணி நிலவரப்படி கேரளாவில் 33.30% வாக்குகள் பதிவாகின. பகல் 1 மணி நிலவரப்படி 49.70% வாக்குகள் பதிவாகின. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 62.71% வாக்குகள் பதிவாகி உள்ளன.

இங்கு ஆளும் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேநேரத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த தேர்தலில் முக்கிய சக்தியாக களத்தில் உள்ளது.

மேலும் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அசாமில் காலை 07 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி இந்த மாநிலத்தில் 38.92% வாக்குகள் பதிவாகின. பகல் 1 மணி நிலவரப்படி 59.63% வாக்குகள் பதிவாகின. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 75.91% வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த மாநிலத்தில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கர்நாடகாவில் இரண்டு தொகுதிகள், நகாலாந்து மற்றும் திரிபுராவில் தலா ஒரு தொகுதி ஆகியவற்றுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் உள்ள பாகல்கோட் தொகுதியில் பிற்பகல் 03 மணி நிலவரப்படி 54.82% வாக்குகள் பதிவாகி உள்ளன. தாவணகெரே தெற்கு தொகுதியில் 49.66% வாக்குகள் பதிவாகி உள்ளன. நாகாலாந்தின் கோரிடாங் சட்டப்பேரவைத் தொகுதியில் 75.06% வாக்குகளும், திரிபுராவின் தர்மநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் 70.09% வாக்குகளும் பதிவாகி உள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!