உலகம் செய்தி

தாக்குதல் தொடரும்! இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!!

லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர்மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு Benjamin Netanyahu திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பிற்காக இந்தத் தற்காப்பு நடவடிக்கை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் சர்வதேச ஒப்பந்தங்களை மீறும் செயல் என்று ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

லெபனான்மீதான தாக்குதலை நிறுத்துமாறு மேலும் பல நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தாக்குதலை கைவிடப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!