USB பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!
இலங்கையில் கடந்த 2026ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 1.5 கோடி (14,960,244) உள்ளூர் Malware பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனமான Kaspersky தெரிவித்துள்ளது.
இணையம் ஊடாகப் பரவும் வைரஸ்களை விட, USB Drives, குறுந்தகடுகள் (DVDs) போன்ற சாதனங்கள் மூலமாகவே 37.4 சதவீதமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
அதாவது, இலங்கையில் உள்ள கணினிப் பயனாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இவ்வாறான சாதனங்கள் மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
உள்ளூர் Malware அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை உலக அளவில் 48ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
குறிப்பாக ‘வேர்ம்ஸ்’ (Worms) மற்றும் ‘ஃபைல் வைரஸ்கள்’ (File Viruses) கணினிகளில் ஊடுருவி, அமைதியான முறையில் முறைமைகளைச் செயலிழக்கச் செய்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.





