அமெரிக்கா, ஈரான் அமைதிப் பேச்சு வார்த்தை – பிரித்தானியா நேரடியாக பங்கேற்றதா?
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியா நேரடியாக ஈடுபடவில்லையென அமைச்சர் சாரா ஜோன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் ஹார்முஸ் நீரிணை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், நிலையான போர்நிறுத்தம் மற்றும் உடன்படிக்கை ஏற்படவும் பிரித்தானியா தனது முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியா நேரடியாக ஈடுபடவில்லை என்றும்,
இதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றி வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், பிரித்தானியா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் சாரா ஜோன்ஸ் அரசாங்கம் எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தற்காப்பு அடிப்படையில் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.





