பிரான்ஸில் ரயிலுடன் மோதிய லொறி : இருவர் ஆபத்தான நிலையில்!
பிரான்சில் ரயில் ஒன்று லொறி ஒன்றின் மீது மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வடக்கு பிரான்சின் பாஸ்-டி-கலே பகுதியில் உள்ள பெத்யூன் (Bethune) மற்றும் லென்ஸ் (Lens) நகரங்களுக்கு இடையேயான ரயில் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ள அதேநேரம் மேலும் 11 பேர் லேசான காயங்களுக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது.
குறித்த லொறி இராணுவ உபகரணங்களை கொண்டுச் சென்றதாக மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





