விளையாட்டு

தொடர் தோல்விகளால் திண்டாடும் CSK!

IPL 2026 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியிலும் சென்னை அணி மண்கவ்வியுள்ளது. தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் அவ்வணி கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவருகின்றது.

சென்னை அணி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அணியை விளாசித்தள்ளி வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் Royal Challengers Bangalore (RCB) மற்றும் chennai super kings (CSK) அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிஎஸ்கே தலைவர் Ruturaj Gaikwad பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய RCB. அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 250 ஓட்டங்களைக் குவித்தது.

இதையடுத்து 251 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய CSK அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றது.

இதனால் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற RCB அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.

இதன் மூலம் அந்த அணி 4 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. CSK அணிக்கு இது ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!