உலகம் செய்தி

பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்

லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்புகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

பெய்ரூட்டில் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்களை
இன்று அதிகாலையில் உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்த பின்னர் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரான் ஆதரவு பெற்ற அந்த அமைப்பு வடக்கு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும், அவற்றை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) இடைமறித்துவிட்டதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லெபனான் கடற்கரைக்கு அப்பால் நேற்று இரவு ஒரு இஸ்ரேலிய போர்க்கப்பல் மீது ஏவுகணையால் தாக்கியதாக ஹிஸ்புல்லா கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரியாது என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!