உலகம் செய்தி

ஈரான் தளபதி காசிம் சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைது!

ஈரானின் முக்கிய படை தளபதிகளுள் ஒருவராக திகழ்ந்த காசிம் சுலைமானியின் General Qassem Soleimani உறவினர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காசிம் சுலைமானியின் சகோதரி Hamideh Soleimani ⁠Afshar மற்றும் அவரது மகள் ஆகியோரே அமெரிக்க குடியுரிமைத் துறையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் நிரந்தர வசிப்பிட உரிமையை அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ ரத்து செய்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இவர்கள் இருவரும் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூண்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது.

அமெரிக்க தாக்குதலில் சில வருடங்களுக்கு முன்னர் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!