உலகம் செய்தி

அமெரிக்க ராணுவ தகவல்கள் ஈரானுக்கு விற்பனை?

சீனாவின், சில இராணுவ தொழில்நுட்ப தனியார் நிறுவனங்கள், ஈரான் இராணுவத்துக்கு, அமெரிக்க இராணுவ நடமாட்டங்கள் பற்றிய உளவுத் தகவல்களை விற்பனை செய்வதாக வோசிங்டன் போஸ்ட் (washingtonpost) குறறம் சுமத்தியுள்ளது.

அமெரிக்க செய்தி நிறுவனமான வோசிங்டன் போஸ்ட் இது பற்றிய ஆய்வுச் செய்தியை இன்று சனிக்கிழமை பிரசுரித்துள்ளது.

அமெரிக்கத் தாக்குதல் செயற்பாடுகளை, ஈரான் வெற்றிகரமாக முறியடிக்கும் சில உத்திகளுக்கு ஏற்ற தகவல்கள் – உளவு விடயங்கள் ஆகியவற்றை சில, சீன தனியார் நிறுவனங்கள், ஈரான் இராணுவ தலைமைக்கு நாளுக்கு நாள் விற்பனை செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்கள், ஈரான் இராணுவத்துடன் நல்ல தொடர்பில் உள்ளன. இதன் காரணமாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளின் நகர்வுகள் பற்றிய விரிவான உளவுத் தகவல்கள் பரிமாற்றப்படுவதாக அச் செய்தி ஆய்வு கூறுகிறது.

அதேவேளை, ஈரான் இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் விடயத்தில் பீஜிங், அதாவது சீன அரசாங்கம் தூர விலகி நிற்பதாகவும், இருந்தாலும், சீன இராணுவத் தலைமைக் கட்டமைப்புக்கு அனைத்தும் நன்கு தெரியும் எனவும் அமெரிக்க இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!