ஈரான்மீதான ராணுவ நடவடிக்கை: 365 அமெரிக்க படையினர் காயம்!
ஈரானுடனான போர் காரணமாக இதுவரையில் 365 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர்.
பென்டகன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
247 ராணுவத்தினரும், 63 கடற்படையினரும், 36 விமானப் படையினரும், படையினருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
போரில் 13 அமெரிக்க படையினர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பன இணைந்து ஈரான்மீதான ராணுவ நடவடிக்கையை கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பித்தன.
இன்று 36ஆவது நாளாக போர் தொடகின்றது.





