லெபனானில் வெடிவிபத்தில் ஐ.நா. அமைதிப்படையினர் காயம்
லெபனானில் இன்று நடந்த வெடிவிபத்தில் மூன்று ஐக்கிய நாடுகள் அமைதிப்படையினர் காயமடைந்துள்ளதாக யூனிஃபில் (UNIFIL) தெரிவித்துள்ளது.
அதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தெற்கு லெபனானில் எல் அடீஸ் அருகே நடைபெற்றது. வெடிவிபத்து எங்கிருந்து தொடங்கியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று யூனிஃபில் செய்தியாளர் கண்டிஸ் ஆர்டியல் தெரிவித்தார்.
காயமடைந்த மூன்று அமைதிப்படையினரும் தற்போது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த வாரம் லெபனானில் வெடிவிபத்துகளில், மூன்று ஐ.நா. அமைதிப்படையினர் உயிரிழந்திருந்தனர்.





