ட்ரம்பின் மிரட்டல் போர்க்குற்றம்: ஈரான் ஜனாதிபதி பதிலடி!
ஈரானை கற்காலத்திற்கே கொண்டுசெல்வோம் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Donald Trump கூற்றுக்கு ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த மிரட்டல் பாரிய போர்க்குற்றத்தைச் செய்வதற்கான நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“இது தொடர்பில் சட்ட நிபுணரான பின்லாந்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன்.
குற்றவாளிகளின் செயல்களுக்கு எதிராக மௌனம் காப்பவர்கள் வரலாற்றில் பெரும் விலையை கொடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டார்.” என ஈரான் ஜனாதிபதி கூறியுள்ளார்.
“ஈரானை மீண்டும் கற்காலத்திற்கே கொண்டு செல்லும் வகையில் குண்டுவீசித் தாக்குவோம்,” என ட்ரம்ப் மிரட்டல் விடுத்த சில மணி நேரங்களிலேயே, ஈரானின் மிக உயரமான பாலம்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.





