உலகம் செய்தி

ஈரானின் ராணுவ வலிமை அழியவில்லை: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!

ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடுத்துவரும் கூட்டு தாக்குதல்களில் அந்நாட்டின் ராணுவ வலிமையை இன்னும் முழுமையாக அழிக்கவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உரிய தரப்புகளுக்கு உளவுத்துறை அறிக்கையிட்டுள்ளது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானிடம் இன்னும் பாதிக்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆளில்லா விமானங்கள் எஞ்சியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரானின் ஆயுதக் கிடங்குகள் பெருமளவு சிதைக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்திற்கு மாறாக உளவுத் தகவல்கள் இருக்கின்றன.

அதேவேளை, தமது உண்மையான ராணுவ வலிமை எதிரி நாடுகளுக்கு சரியாக தெரியவில்லை என ஈரான் தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!