ஐரோப்பா

கொள்ளையர்களின் கைவரிசை – 2500 ஆண்டுகள் பழமையான தங்க தலைக்கவசம் மீட்பு!

2,500 ஆண்டுகள் பழமையான , விலைமதிப்பற்ற  ரோமானிய காலத்து தங்கத் தலைக்கவசம் இன்று  நெதர்லாந்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த தலைக்கவசம் 2025-ஆம் ஆண்டில் நடந்த ஒரு துணிச்சலான கொள்ளையின் போது  திருடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள டச்சு காவல்துறை அதிகாரி கோரியன் ஃபானர் (Corien Fahner), “கோட்டோஃபெனெஸ்டி (Cotofenesti ) தலைக்கவசமும் இரண்டு டேசியன் (Dacian) தங்கக் கைக்காப்புகளும் திரும்பக் கிடைத்துவிட்டன, இதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ருமேனியாவில் இடம்பெற்ற இந்த திருட்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், ஒரு மாபெரும் காவல்துறை தேடுதல் வேட்டைக்கும் வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!