இஸ்பஹான் ஏவுகணைத் தளத்தில் சக்திவாய்ந்த வெடிப்புகள்
ஈரானின் இஸ்பஹான் நகர புறநகரில் அமைந்துள்ள முக்கிய ஏவுகணைத் தளத்திற்கு அருகில் பெரும் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மூன்று காணொளிகளை ஆய்வு செய்ததில், அந்தத் தளத்தின் தெற்கு பகுதியில் பெரிய புகைமூட்டமும் தீப்பரவலும் ஏற்பட்டது உறுதியாகியுள்ளது. வெடிப்பின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தமை காணொளிகளில் பதிவானது.
மற்றொரு காட்சியில், மலைப்பகுதிகளுக்கு மேல் புகை எழுவதையும் தொடர்ந்து பல இரண்டாம் நிலை வெடிப்புகளும் நிகழ்ந்ததையும் காண முடிகிறது. இது ஆரம்பத் தாக்குதலுக்கு பின்னர் கூடுதல் வெடிபொருட்கள் வெடித்திருக்கலாம் எனக் காட்டுகிறது.
அருகிலுள்ள பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட காணொளிகள், அந்தத் தளம் பல நிமிடங்கள் தீப்பற்றிய நிலையில் இருந்ததையும், சிதைவுகள் சுற்றுப்புறங்களுக்கு வீசப்பட்டதையும் வெளிப்படுத்துகின்றன.
இந்த வெடிப்புகளின் காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.





