ரஷ்ய எரிசக்தி தாக்குதல்கள் குறைக்கப்படலாம் – செலென்ஸ்கி
உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை உயர்ந்து வருவதை முன்னிட்டு, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தித் துறைக்கு
எதிரான உக்ரைனின் தாக்குதல்களில் குறைக்குமாறு நட்பு நாடுகள் கேட்டுக்கொண்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
“ரஷ்யா உக்ரைனின் எரிசக்தியைச் சிதைக்கத் தயாராக இல்லையெனில், நாங்கள் அவர்களின் மீது தாக்குதல் நடத்தாமல் பதிலடி கொடுப்போம் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுடன்
செலென்ஸ்கி சந்திப்புகளை நிறைவு செய்த பின்னர் , கீவ் நகருக்கு திரும்பியுள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா சில ரஷ்ய எண்ணெய் தடைகளை தளர்த்தியுள்ளது.
ரஷ்யாவின் உஸ்ட்-லுகா துறைமுகம் போன்ற முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனைகளுக்கு எதிரான உக்ரைனின் தாக்குதல்களுக்கு பிறகு, ஜனாதிபதி செலென்ஸ்கியின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.




