ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு 8 நவீன தாழ் தள பஸ்கள்
ஜப்பானிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 08 நவீன தாழ் தள (low-floor) பஸ் வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் பஸ் வண்டிகளை இலங்கை போக்குவரத்துச் சபையிடம் (SLTB) உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று (28) கையெழுத்திடப்பட்டது.
இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா கலந்துகொண்டார்.
இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவதில் இந்த உதவி ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, முதியவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்கள் இலகுவாகப் பயணம் செய்வதற்கு ஏதுவாக இந்தப் பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.





