உலகம் செய்தி

இஸ்ரேலுக்கு தலையிடியாக மாறியுள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் ‘கொரில்லா போர்’!

லெபனானில் தரைவழி தாக்குதலை முன்னெடுத்துவரும் இஸ்ரேல், சில சவால்களை எதிர்கொண்டுள்ளது என தெரியவருகின்றது.

இஸ்ரேலியப் படைகள் பல்வேறு திசைகளில் இருந்து ஊடுருவலை மேற்கொண்டுவரும் நிலையில் ஹிஸ்புல்லா குழுவினர் மறைந்திருந்து தாக்கும் கொரில்லா உத்திகளை கையாண்டுவருகின்றது.இந்த நகர்வானது இஸ்ரேல் படையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

குறிப்பாக, லிட்டானி நதியை Litani River நோக்கிய இஸ்ரேலின் இலக்கில் தடையாக இருக்கும் முக்கிய இடங்களைக் கைப்பற்ற இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெறுகின்றன.

இச்சண்டையில் இஸ்ரேலியத் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களை மீட்க உலங்குவானூர்திகள் பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவீன ஆயுதங்களைக் கொண்டுள்ள இஸ்ரேலியப் படைகளை நேரடியாகத் தடுப்பதற்குப் பதிலாக, இந்தப் போரை அவர்களுக்கு அதிக இழப்புகளை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாக மாற்றுவதையே ஹிஸ்புல்லா நோக்கமாகக் கொண்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!