உலகம் செய்தி

வடக்கு இஸ்ரேலில் தாக்குதல் தீவிரம் – ஒருவர் உயிரிழப்பு , 25 பேர் வைத்தியசாலையில்

வடக்கு இஸ்ரேலின் நஹாரியா பகுதியில்  ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவசர சேவை மாகன் டேவிட் அடோம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 25 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் 50 வயதுடைய ஒருவருக்கு கை, கால்களில்  காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 13 பேர் சிறியளவான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவசர சேவை கூறியுள்ளது.

இதேவேளை, லெபனானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!