துருக்கியால் இயக்கப்படும் எரிபொருள் கப்பல்மீது ட்ரோன் தாக்குதல்!
கருங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த துருக்கியால் இயக்கப்படும் கச்சா எண்ணெய் கப்பல் மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Sierra Leonne நாட்டின் கொடியுடன் பயணித்த இந்த கப்பலில் 27 துருக்கி மாலுமிகள் இருந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ரஷ்யாவின் Novorossiysk துறைமுகத்திலிருந்து சுமார் பத்து லட்சம் பேரல் எண்ணெயுடன் புறப்பட்ட இந்த கப்பல் Turkish firm Besiktas நிறுவனத்திற்கு சொந்தமானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி போக்குவரத்து அமைச்சகம் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய நிலையில், கப்பலுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து மேலதிக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.





