செல்பி எடுக்க முயன்று உலக முடிவு பள்ளத்தில் வீழ்ந்த பல்கலைக்கழக மாணவி
ஹோர்டன் பிளைன்ஸ் ‘உலக முடிவு’ (World’s End) பகுதியில் செல்பி எடுக்க முயன்றபோது, சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் காயங்களின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி உலக முடிவுப் பகுதியின் பிரதான சரிவில் செல்பி எடுக்க முயன்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீழ்ந்த மாணவி, அங்கிருந்த மரக் கிளை ஒன்றில் சிக்கிக்கொண்டார்.
நிலைமையைப் அவதானித்த ஹோர்டன் பிளைன்ஸ் தேசிய பூங்காவின் சாரதி ஒருவர், தனது உயிரையும் பொருட்படுத்தாது சரிவில் இறங்கி அந்த மாணவியை மரத்திலிருந்து கீழே இறக்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பட்டிப்பொல பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து அந்த மாணவியை பாதுகாப்பாக மேலே கொண்டு வந்துள்ளனர் .





