உலக உணவுப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் எதிர்வரும் ஜூன் மாதம் வரை நீடிக்குமானால், உலகளவில் மேலும் 45 மில்லியன் மக்கள் கடும் பசி மற்றும் பட்டினிக்கு முகம் கொடுக்க நேரிடும் என உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
தற்போது உலகளவில் 319 மில்லியன் மக்கள் கடும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் Carl Skau தெரிவித்துள்ளார்.
இதுவே இதுவரை பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிக்குமானால், மேலும் 45 மில்லியன் மக்கள் கடும் பசி மற்றும் பட்டினிக்கு முகம் கொடுக்க நேரிடும் என Carl Skau குறிப்பிட்டுள்ளார்.





