11 ஆண்டுகளுக்குப் பின் கொழும்பு வரும் British Airways!
British Airways நிறுவனம் தனது 2026 குளிர்கால அட்டவணை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, லண்டன் Gatwick மற்றும் கொழும்புக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு British Airways நிறுவனம் இலங்கைக்கு வழங்கும் முதல் நேரடிச் சேவை இதுவாகும்.
ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் லண்டன் Gatwick விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வாரத்துக்கு மூன்று முறை நேரடி விமான சேவைகள் முன்னெடுக்கப்படும்.
இதற்கான பயணச் சீட்டு விற்பனை நேற்று (17) ஆரம்பமானது. அதன்படி, இலங்கையிலிருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுக்கும் ஒரே விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மாத்திரமே காணப்படுகிறது.





