இந்திய கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி வழங்குவதன் பின்புலம் என்ன?
ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் பயணிப்பதற்கு நட்பின் அடிப்படையிலேயே ஈரான் அனுமதி வழங்கியது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் S. Jaishankar தெரிவித்தார்.
இது தொடர்பில் பிரதிபலனாக ஈரான்எதையும் பெறவில்லை எனவும் அவர் கூறினார்
‘‘ உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் ஹார்முஸ்நீரிணை வழியாகவே நடைபெறுகின்றது.
எனவே, இந்த பாதையை மீண்டும் திறக்கப்படுவதற்காக ஈரானுடன் இந்தியா பேச்சுசு நடத்தி வருகிறது.
பேச்சுவார்த்தை நடத்தாமல் தொடர்பை துண்டித்துக் கொள்வதைவிட, அவர்களுடன் பேசுவதும், புரிந்து கொள்வதும், ஒருங்கிணைந்து செயல்படுவதும் இந்தியாவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
இதன்மூலம் ஒரு தீர்வைப் பெறுவதே இந்தியாவின் பார்வையில் சிறந்தது.
கலந்துரையாடல் காரணமாக இந்திய கொடியேற்றிய சில எண்ணெய் கப்பல்கள், ஹார்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியாவுக்கு வந்துள்ளன. இன்னும் பல கப்பல்கள் அந்த நீரிணையை கடக்க வேண்டியது உள்ளது.” எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.





