தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்ட சபைத் தேர்தல் திகதி அறிவிப்பு
தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்ட சபைத் தேர்தல் திகதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் இன்று அறிவித்தார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரே கட்டமாக சபைத் தேர்தல் தேர்தல் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குகள் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ஆம் திகதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் திகதி வரை நடைபெறும்.
மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் திகதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்ரல் 9 ஆம் திகதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9 ஆம் திகதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்.
வாக்குகள் மே 4 ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் மார்ச் 16 ஆம் திகதி தொடங்கி மார்ச் 23 ஆம் தேதி வரை நடைபெறும்.
மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24 ஆம் திகதி நடைபெறும். மனுவை திரும்ப பெற மார்ச் 26 ஆம் திகதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.





