இந்தியா செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இந்தியாவுக்கு நேசக்கரம்: ஈரான் உறுதி!

“நெருக்கடியான நேரத்தில் இந்தியா உதவி செய்து வருகிறது. எனவே ஈரானும் நிச்சயம் உதவி செய்யும்.” என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலி Mohammad Badali தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலி டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.

“ஈரான் மற்றும் இந்தியாவுக்கிடையில் மிக நீண்ட காலமாக நட்புறவு நீடிக்கிறது. எங்களது மிக நெருங்கிய நட்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய சரக்கு கப்பல்கள் கடந்து செல்ல விரைவில் அனுமதி வழங்கப்படும்.

போரால் நாங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளோம். இந்த நேரத்தில் எங்களுக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. நாங்களும் இந்தியாவுக்கு நிச்சயம் உதவி செய்வோம்.

இந்தியா – ஈரான் அரசுகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!