உலகம் செய்தி

ட்ரம்ப்பை கொல்லுங்கள்: ஈரான் மதகுரு பகிரங்க அழைப்பு!

அமெரிக்க ஜனாதிபதி கொல்லப்பட வேண்டும் என ஈரான் மதகுரு ஒருவர் விடுத்துள்ள அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் மூத்த ஷியா மதகுருக்களில் ஒருவரான அயத்துல்லா அப்துல்லா ஜவாதி அமோலியே Ayatollah Abdollah Javadi Amoli அரச தொலைக்காட்சியில் உரையாற்றும்போது இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

“நாம் இப்போது ஒரு பெரிய சோதனையின் விளிம்பில் இருக்கிறோம். இந்த ஒற்றுமையை நாம் முழுமையாகப் பாதுகாக்க வேண்டும்.

யூதர்களின ரத்தம் சிந்தப்பட வேண்டும், ட்ரம்பின் ரத்தம் சிந்தப்பட வேண்டும்.” எனவும் அவர் கூறியுள்ளார்.

அடக்குமுறை செய்யும் அமெரிக்காவை எதிர்த்துப் போராடுங்கள், ட்ரம்பின் ரத்தம் என் தோள்களில் உள்ளது என காலத்தின் இமாம் கூறுகிறார்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஷியா இஸ்லாமிய மதகுருமார்களில் ‘அயத்துல்லா’ என்பது மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றாகும். ஈரானில் இத்தகைய மூத்த மதகுருக்கள் பலர் உள்ளனர்.

அவர்களின் மத மற்றும் அரசியல் ரீதியிலான கருத்துகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த அறிக்கை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!