எரிபொருள் குறித்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு விசேட அறிவிப்பு
கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கிடைக்க பெறுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்
இன்று(05-03-2026) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
குறிப்பாக மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள் மற்றும் ஏனைய தேவைகள் கருதி மேலதிகமான எரிபொருளை கோரி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வழமை போன்று எரிபொருள் கிடைக்கப் பெறுவதாகவும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்





