ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தத்தில் கவனம் செலுத்துமாறு லிபரல் அரசாங்கத்திடம் கோரிக்கை

ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தத்தில் அதிக கவனம் செலுத்துமாறு லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் துணைத் தலைவர் டெய்ஸி கூப்பர் (Daisy Cooper), ஐரோப்பாவுடன் சிறந்த வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் பெறுவதில் அரசு முழுமையாக
கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியம் இடையே புதிய சுங்க ஒன்றியத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையைத்
தொடங்கும் நோக்கத்தை அரசு அறிவித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை பட்ஜெட் பொறுப்புக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள பொருளாதார கணிப்புகள் விரைவில் காலாவதியாகிவிடும்
என்றும் ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பிரித்தானியாவில் மக்களின் செலவினங்களிலும்
தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் டெய்ஸி கூப்பர் எச்சரித்தார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!