இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர்: எதிரணி எம்.பிக்கள் கொழும்பில் முகாமிட்டு ஆராய்வு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திலுள்ள SL Parliament எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (03) இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அச்சந்திப்பில் பங்கேற்றனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல்தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் தாக்கங்கள் பற்றியும் பேசப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் 10 லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கையர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பிலும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகளால் சில யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!