ஈரானில் புதிய இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்
ஈரானின் புதிய இடைக்கால உச்சத் தலைவராக அயத்துல்லா அலிரேசா அராஃபி (Ayatollah Alireza Arafi) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரான், நீண்டகால உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டு தாக்குதலில்
உயிரிழந்த நிலையில் புதிய இடைக்கால உச்சத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அராஃபி, கடந்த சில தசாப்தங்களாக கமேனியின் அருகில் இருந்தவர் என்பதுடன் அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் கார்டியன் கவுன்சில் (Guardian Council, Iran) போன்றவற்றில் முக்கிய பதவிகளிலும் இருந்தார்.
ஈரானில் உச்சத் தலைவர் மிகவும் மதநிபுணத்துவமும் சட்ட அதிகாரமும் கொண்ட மூத்த ஷியா மதகுருவாக இருக்க வேண்டும்
என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.
ஈரானில் செமினரிகள் மக்களுடன் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுடன் இணைந்து அரசியல் மற்றும் சர்வதேச முறைகளில் செயல்பட வேண்டும் என
அராஃபி தெரிவித்துள்ளார்.
“செமினரிகள் என்பது ஈரானில் மதக் கல்வி பெறும் அல்லது கற்பிக்கும் மத அறிஞர்கள்” என்று அர்த்தம்.
இந்த நிலையில் அராஃபியின் எழுச்சி, 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு உச்சத் தலைமையில் இரண்டாவது மாற்றத்தை குறிக்கிறது.





