செய்தி

தமிழ்ச் செல்வன்மீது தாக்குதல்: சுரேஷ் சலேவுக்கு உளவு தகவல் கிடைத்தது எப்படி?

“ சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயேதமிழ்ச் செல்வன் இலக்கு வைக்கப்பட்டு, வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.”
என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச Wimal Weerawansa. தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே விமல் வீரவன்ச மேற்படி தகவலை வெளியிட்டார்.

புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“ அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த சுரேஷ் சலே ஒருநாள் பாதுகாப்பு சபைக் கூட்டத்தின்போது முக்கிய தகவலொன்றை வெளியிடுவார்.

அடுத்த வாரம் விசேட இலக்கு இருப்பதாகவும், விமானப்படையின் தாக்குதல் விமானமொன்றை 24 மணிநேரமும் தயார் நிலையில் வைக்குமாறு கூறி இருந்தார்.

இதற்கமையவே தமிழ்ச்செல்வன் இருந்த இடம்மீது துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது.

தமிழ்ச் செல்வனுடன் இருக்கும் நபர் ஒருவர் ஊடாகவே அந்த உளவு தகவல் பெறப்பட்டிருக்கும்.

எனவே, தமிழ்ச் செல்வனுடன் இருந்தவருடன் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு இருந்தது என்பதற்காக அவரை புலியென கூற முடியுமா?

புலனாய்வு பிரிவு என்றால் அனைத்து தரப்புடனும் தொடர்பு இருக்கும்.” எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!