ஐரோப்பா

பிரித்தானியாவில் சமூக ஊடகத் தடை : இன்ஸ்டாகிராம் வெளியிட்ட அறிவிப்பு!

16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான தடையை அறிமுகப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில், இன்ஸ்டாகிராம் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய டீனேஜர்கள் சமூக ஊடகங்களில் கொலை, தற்கொலை உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை பார்க்கும்போது அது தொடர்பில் பெற்றோருக்குத் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

“இந்த எச்சரிக்கைகள் இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து டீனேஜர்களைப் பாதுகாக்க உதவும் எங்கள் தற்போதைய வேலையின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன,” என்று அந்த தளம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய தேடல்களைத் தடுப்பதும், மக்களை ஆதரவு வளங்களுக்குத் திருப்பிவிடுவதும் முக்கிய கொள்கையாக செயற்படுத்தப்படுவதாகவும்,  குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடங்களில் குழந்தைகளின் நலன் கேள்விக்குரியாகியுள்ள நிலையில் ஆஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடையை அறிமுகப்படுத்தியுள்ளன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!