ஐரோப்பா

லூவ்ரே அருங்காட்சியகத்தை வழிநடத்த புதிய தலைவர் நியமனம்!

பிரான்ஸின் லூவ்ரே அருங்காட்சியகம்  கொள்ளை, பாதுகாப்பு குறைப்பாடு மற்றும் டிக்கெட் விநியோக முறைக்கேடு என பல சிக்கல்களை சந்தித்த நிலையில்,  லாரன்ஸ் டெஸ் கார்ஸ்  (Laurence des Cars) தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் லூவரின் புதிய தலைவராக கிறிஸ்டோஃப் லெரிபால்ட் (Christophe Leribault) நியமிக்கப்பட்டுள்ளார்.

“கட்டிடம், சேகரிப்புகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவது, நம்பிக்கையின் சூழலை மீட்டெடுப்பது மற்றும் அனைத்து குழுக்களுடன் சேர்ந்து அருங்காட்சியகத்திற்குத் தேவையான மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வது லெரிபால்ட்டின் முன்னுரிமையாக இருக்கும்” என்று கலாச்சார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

62 வயதான லெரிபால்ட், வெர்சாய்ஸ் அரண்மனையின் இயக்குநராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!