இந்தியா – ஸிம்பாப்வே மோதலில் இசை விருந்து!
T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ‘சுப்பர் 8’ சுற்று தற்போது நடைபெற்று வருகின்றது.
சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (26) நடைபெறவுள்ள இந்திய மற்றும் ஸிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியின் போது, அனிருத்தின் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
தனது துள்ளலான இசையால் ரசிகர்களைக் கட்டிப்போடும் அனிருத், கிரிக்கெட் மைதானத்தில் ஒரு மாபெரும் கொண்டாட்டத்தை நிகழ்த்தவுள்ளார்.
குறிப்பாக, சேப்பாக்கம் மைதானத்தில் குறித்த நிகழ்வு நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.





