இலங்கை செய்தி

இலங்கை, ரஷ்யா உறவை வலுப்படுத்துவது குறித்து ஆராய்வு!

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan, இன்று (25) முற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளையும் பாதிக்கும் பொதுவான விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

மேலும், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் உள்ள ரஷ்யக் கூட்டமைப்பின் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் German Fedorov மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!