ஐரோப்பா

அமைதி பேச்சுவார்த்தையில் சந்தேகம் : மக்ரோன் விமர்சனம்!

அமெரிக்கவின் தலைமையில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டிற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகம் இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தெரிவித்துள்ளார்.

உக்ரேனிய, ரஷ்ய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சமீபத்திய பேச்சுவார்த்தைகள் சாதகமற்ற நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், புட்டின் அமைதி ஒப்பந்தத்திற்கு புறம்பாக செயற்படுவதையும் எடுத்துக்கூறியுள்ளார்.

கீவின் நட்பு நாடுகளின் மெய்நிகர் கூட்டத்தில் பேசிய மக்ரோன் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், உக்ரைனுக்கு அதிகரித்த ஆதரவைக் கோரியுள்ளார்.

அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் €90 பில்லியன் உதவித் தொகுப்பிற்கு ஹங்கேரி வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளதையும் விமர்சித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!