விளையாட்டு

T -20 உலகக்கிண்ண தொடரில் சதமடித்த முதல் கெப்டன்!

ICC T20 உலகக் கிண்ண தொடரில் சதம் அடித்த முதல் தலைவர் என்ற சாதனையை இங்கிலாந்து அணி வீரர் ஹாரி புரூக் Harry Brook படைத்தார்.

ICC T20 உலகக் கிண்ண தொடரின் சூப்பர்8 சுற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்துEngland , பாகிஸ்தான் Pakistan அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.

அடுத்து ஆடிய இங்கிலாந்து 19.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

அணித் தலைவர் ஹாரி புரூக் தனி ஆளாகப் போராடி அதிரடியாக ஆடி சதமடித்து 100 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

ஒரு புறம் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இவரது சதமே வழிசமைத்து கொடுத்தது எனலாம்.

இந்நிலையில், டி20 உலகக் கிண்ண தொடரில் சதம் அடித்த முதல் தலைவர் என்ற சாதனையை ஹாரி புரூக் படைத்தார்.

இதற்கு முன் கிறிஸ் கெயில் Chris Gayle 98 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!