இலங்கை செய்தி

தபாலில் அனுப்பிவைக்கப்பட்ட 04 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள்

400,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சுமார் ஒரு இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படவுள்ளதாக அதன் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

வேரஹெர, அனுராதபுரம், மாத்தறை மாவட்ட அலுவலகங்களிலும் தற்போது சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான சுமார் 8 இலட்சம் அட்டைகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை வழங்கும் நடவடிக்கை கடந்த 02 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த காலத்தில் அதற்கு பதிலாக தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமே விநியோகிக்கப்பட்டது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!