ஐரோப்பா

விட்டிலிகோ நோயை குணப்படுத்த புதிய க்ரீம் அறிமுகம்!

விட்டிலிகோ நோயை குணப்படுத்த முதல் முறையாக க்ரீம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை Ruxolitinib (Opzelura என விற்கப்படுகிறது) என்ற க்ரீமை அங்கீகரித்துள்ளது.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கேர் எக்ஸலன்ஸ்  (National Institute for Health and Care Excellence) விட்டிலிகோவின் தாக்கம் உள்ள 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு இந்த க்ரீமை பரிந்துரைக்கிறது.

குறிப்பாக பிற மேற்பூச்சு சிகிச்சைகள் தோல்வியடைந்தால் இந்த க்ரீம் பரிந்துரைக்கப்படுகிறது.

விட்டிலிகோ என்பது ஒரு நாள்பட்ட தோல் நிலை, இதில் நோயெதிர்ப்பு அமைப்பு நிறமி உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்கி, வெள்ளைத் திட்டுகளை ஏற்படுத்துகிறது.

இந்த நோய் நிலைமை பிரித்தானியாவில் 100 பேரில் ஒருவரை பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.  Ruxolitinib நோயெதிர்ப்பு மண்டலத்தின் தாக்குதலை அமைதிப்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது.

தோல் செல்கள் சரிசெய்யப்பட்டு அவற்றின் இயற்கையான நிறத்தை மீண்டும் பெற அனுமதிப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிற மருந்துகளை விட 04 மடங்கு அதிகமாக பயனுள்ளதாக இருப்பதாகவும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!