முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்தவுக்கு விளக்கமறியல்
வெலிகம W15 ஹோட்டல் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜகத் நிஷாந்த எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வெலிகம W15 ஹோட்டல் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜகத் நிஷாந்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வௌிநாட்டில் இருந்து நாடு திரும்பியபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.
2023 டிசம்பர் 31 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொழும்பு குற்ற விசாரணை பிரிவில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.





