இலங்கை செய்தி

வவுனியாவில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு: விசாரணை தீவிரம்!

வவுனியாVavuniya , ஈரற்பெரியகுளம் பகுதியில் மயானம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஈரற்பெரியகுளம் மயானப் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பது தொடர்பாக இன்று காலை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உடலின் ஒரு பகுதி தீயினால் எரிந்த நிலையில் காணப்படுவதுடன், உயிரிழந்தவர் யார் என்பது குறித்த விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவ இடத்துக்குத் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக சோதனைகள் நடத்தப்பட்டன.

மரணத்துக்கான காரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் ஈரற்பெரியகுளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!