விபத்தில் சிக்கிய மருத்துவ விமானம் – 07 பேர் உயிரிழப்பு!
இந்தியாவின் ஜார்க்கண்டின் (Jharkhand) சத்ரா மாவட்டத்தில் உள்ள சிமாரியா (Simaria) அருகே நேற்று மருத்தவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் குறித்த விமானத்தில் பயணித்த 07 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்தபோது விமானம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்ததாக மாநில அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரெட்பேர்ட் ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் (Redbird Airways Pvt Ltd) நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம் ராஞ்சி விமான நிலையத்திலிருந்து இரவு 7:11 மணிக்கு புறப்பட்டதாகவும், 7:30 மணியளவில் காணாமல் போனப்பின்னர் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது கடுமையான வானிலை நிலவியதாக கூறப்படும் அதேவேளை மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





