சங்க மாநாடு தோல்வி: அமைச்சர் சுட்டிக்காட்டு!
“ பௌத்த பிக்குகள் சிலரால் நடத்தப்பட்ட சங்க மாநாடு தோல்வியில் முடிந்துள்ளது.” என்று அமைச்சர் லாந்காந்த Lankantha தெரிவித்தார்.
பௌத்த பிக்குகள் எதிர்கொள்ளும் அநீதிகள், புத்தசாசனம், நாட்டின் நிலை குறித்து ஆராய்வதற்காகவே சங்க மாநாடு நடத்தப்பட்டிருந்தது.
இதில் உரையாற்றிய தேரர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் சங்க மாநாடு தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் லால்காந்த,
“சங்க மாநாட்டில் 300 இற்கு குறைவான தேரர்களே பங்கேற்றுள்ளனர்.
எண்ணிக்கையின் அடிப்படையில் மாநாடு தோல்வியாகும்.
அரசுக்கு எதிராக எங்கு போராட்டமோ அல்லது மாநாடோ நடந்தாலும், அங்கு சென்று அமர்ந்துகொள்ள வேண்டும் என்ற மனநிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளார்.
சஜித் பிரேமதாசவின் Sajith Premadasa அரசியல் பயணமும் தோல்வியை நோக்கியே செல்கின்றது.” – என்றார்.





