இந்தியா தமிழ்நாடு

தமிழக தேர்தல் ஸ்டாலினுக்கும், விஜய்க்கும் இடையிலான போர்!

நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவை தேர்தலானது விஜய்க்கும், ஸ்டாலினுக்கும் இடையிலான போராகும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் இன்று (23) உரையாற்றுகையிலேயே விஜய் இவ்வாறு கூறினார்.

“மக்களை நேசிக்கிற ஒரு சரியான தலைமை இல்லாததால், முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்தனர்.

இன்று மக்களை நேசிக்கும் இயக்கமாக தவெக வந்துள்ளது.” எனவும் விஜய் சுட்டிக்காட்டினார்.

தற்போது நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தல், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழல், லஞ்சம், நிர்வாகத்தை சரியாக செய்யாத உங்கள் ஆட்சிக்கும் நடக்கும் போர்.

விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே நடைபெறும் போர்தான் இந்த தேர்தல். தீய சக்தி திமுக, தூய சக்தி தவெகவுக்கு இடையேயான போர்.” எனவும் விஜய் குறிப்பிட்டார்.

இதனிடையே, “முரட்டு ஜல்லிக்கட்டு காளைதான் தமிழ்நாட்டின் அரசியல்களம். ஜல்லிக்கட்டு காளையை தில்லாக அடக்கும் சிறிய பையன்தான் தமிழக வெற்றிக் கழகம்” என விஜய் குட்டிக் கதையும் கூறினார்.

 

Dila

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!